“தேடு”-திரைவிமர்சனம்..!! மொத்தத்தில் தேடு தேட முடியவில்லை..

நாயகன் சஞ்சயும், நாயகி மேக்னாவும் காதலித்து வருகிறார். இவர்களின் காதல் மேக்னாவின் வளர்ப்பு தந்தைக்கு பிடிக்காமல் போகிறது. இதனால், சஞ்சயை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார். இதே சமயம், மேக்னாவை மற்றொரு இளைஞர் காதலிக்கிறார். அவரின் காதலை ஏற்காததால் மேக்னாவை கடத்த திட்டமிடுகிறார்.
இறுதியில் சஞ்சய், மேக்னா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சஞ்சயை மேக்னாவின் வளர்ப்பு தந்தை தீர்த்து கட்டினாரா? மேக்னாவை ஒருதலையாக காதலிப்பவரின் நிலைமை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சஞ்சய், தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மேக்னா ஏற்கனவே படங்களில் நடித்திருப்பதால், இதில் கொஞ்சம் ஆறுதலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லனாகவும், நாயகியின் வளர்ப்பு தந்தையாகவும் வரும் சிவகாசி முருகேசன், பிரபாகரன், ராணி, கமலா, சுவாமி தாஸ், காமராஜ், கல்கி ஜெகவீரபாண்டியன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கும் சுசி.ஈஸ்வர், அதில் செல்பி மோகத்தால் ஏற்படும் விளைவுகளையும், ஒரு தலை காதலால் ஏற்படும் விளைவுகளையும் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். திரைக்கதை தெளிவு இல்லாததால் அது பெரியதாக எடுபட வில்லை.

டி.ஜே.கோபிநாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் கவனம் செலுத்தி இருக்கலாம். சபரியின் ஒளிப்பதிவு பெரியதாக கவரவில்லை. மொத்தத்தில் ‘தேடு’ தேட முடியவில்லை.


Advertisements

Next Post

விஜய் மற்றும் மாளவிகா மோகனன்... இருவரின் புகைப்படம் வைரல்..மாஸ்டர் ஷூட்டிங்....

Mon Jan 20 , 2020
விஜய் தற்போது நடித்துவரும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. விஜய் சேதுபதி வீடியோ ஒன்றும் லீக் ஆகி சென்ற வாரம் வைரலானது. இந்நிலையில் தற்போது மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று தற்போது கசிந்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். Advertisements
%d bloggers like this: