‘கர்ப்பமா’ இருந்த மனைவி ஊருக்கு வர மறுத்த காரணத்தால்.. கழுத்தை அறுத்த கொடூர கணவன்.. பயத்தில் தற்கொலை..!

“ஏங்க.. நான் கர்ப்பமா இருக்கேன்.. இப்போ எப்படி டிராவல் பண்றது.. நான் ஊருக்கு வரல” என்று சொன்ன மனைவியின் கழுத்தை காய்கறி நறுக்கும் கத்தியால் வெட்டிவிட்டார் கணவன்! ரத்த வெள்ளத்தில் மனைவி சரிந்துவிழுந்ததை பார்த்ததும் பயந்துபோய், மனைவியின் சேலையிலேயே தூக்கு போட்டு கொண்டு தொங்கியும் விட்டார்.. ஆனால் மனைவி பிழைத்து கொண்டார்! பண்ருட்டி அருகே உள்ளது கீழ்கவரப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவருககு 2 மகள்கள், 5 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் காத்தவராவன், மனைவி மற்றும் 23 வயது மகள் சித்ராவுடன் பல்லடம் சேடபாளையம் மூலைதோட்டம் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தார். அங்குள்ள நூற்பாலையிலும் இவர்கள் வேலை பார்த்து வந்தனர்.

அதே நூற்பாலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஹென்றி என்பவர் வேலை செய்து வந்தார்.. இதனால் சித்ராவுக்கு அவருடன் நட்பு ஆரம்பமாகி, காதலாக மாறியது… 6 மாத காதலுக்கு பிறகு கல்யாணம் செய்து கொண்டனர்.. அதே பகுதியில் தனிக்குடித்தனமும் நடத்தி வந்தனர்.. இப்போது சித்ரா கர்ப்பமாக உள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வழக்கம்போல் இந்த வருடமும் சொந்த ஊருக்கு செல்ல ஹென்றி விரும்பினார்.. இந்த முறை கர்ப்பமான புதுமனைவியை ஊருக்கு அழைத்து செல்லவும் விரும்பினார். ஆனால், சித்ராவின் பெற்றோர் மகள் கர்ப்பமாக இருப்பதை காரணம் காட்டி “அலைய வைக்க வேண்டாம்.. ரிஸ்க்… இந்த வருஷம் இங்கேயே பண்டிகை கொண்டாடுங்கள்” என்று சொல்லி உள்ளார்.. இது சில தினங்களாகவே தம்பதிக்குள் வாக்குவாதமாக மாறியது!

நேற்று மாமனாரும், மாமியாரும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் சித்ராவை திரும்பவும் ஊருக்கு கூப்பிட்டார் ஹென்றி. “நான் கர்ப்பமா இருக்கேன்…ங்க… எப்படி டிராவல் பண்றது? வேண்டாம்” என்று சித்ரா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஹென்றி, நேராக கிச்சனுக்கு போய், காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து சித்ராவின் கழுத்தை அறுத்தார்.

இதில் ரத்தம் தெறித்து கொட்டி, சித்ரா கீழே மயங்கி விழுந்தார்.. சித்ரா இறந்துவிட்டதாக ஹென்றி பயந்துவிட்டார்.. இப்படி அநியாயமாக கர்ப்பிணியை கொன்றுவிட்டோமே என்று நினைத்து, சித்ராவின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து, மயக்கம் தெளிந்த சித்ரா, தட்டு தடுமாறி ரத்த வெள்ளத்திலேயே கணவனை தேடினார்.. அப்போதுதான், தூக்கில் ஹென்றி தொங்கி கொண்டிருப்பதை கண்டு அலறினார்.. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்த சித்ராவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. இப்போது சித்ராவுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.

Advertisements

Next Post

"மாநாடு" படத்தில் சிம்புவு-க்கு வில்லனாக ஓகே சொன்ன நடிகர் யார் தெரியுமா?..

Thu Dec 26 , 2019
சிம்புவுக்கு வில்லனாக நடிக்க, கன்னட ஹீரோ சுதீப் ஓ.கே.சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. சிம்பு நடிக்கும் மாநாடு படத்தைத் தொடங்க இருப்பதாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே அறிவித்திருந்தார். படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிம்பு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது இதனால் படத்தை டிராப் செய்வதாக அறிவித்தார், சுரேஷ் கமாட்சி. இந்நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையிலான பிரச்னையை தயாரிப்பாளர்கள் சிலர் பேசி தீர்த்தனர். இதையடுத்து, படத்தை மீண்டும் தயாரிக்க […]

Actress HD Images

%d bloggers like this: