தமிழ் நாட்டில் கொரோனா வைரசால் ஒருவர் பலி..!!

திருச்சியில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் திடீரென உயிரிழந்தது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாகத் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவை மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதே வேளையில் வெளிநாட்டினர் இந்தியா வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வெளிநாட்டிற்குப் புறப்படச் செல்லும் பயணிகளிடம் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இதில் தங்கள் சொந்த நாட்டிற்குப் பறக்க முயன்றவர்கள் சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் பலர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, திருச்சியில் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ். இவருக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலத்தில் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தொடர்ந்து விக்னேஷுக்கு சிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்துபோன விக்னேஷ் உறவினர்கள், உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சில நிமிடங்களிலே விக்னேஷுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் விக்னேஷ் உயிரைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும், எதுவும் பலனளிக்கவில்லை.

இதற்கிடையே, விக்னேஷ் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட சில நிமிடங்களிலே உயிரிழந்து விட்டதால், அவரின் ரத்த மாதிரிகளைச் சோதனைக்கு எடுக்க இயலவில்லை என மருத்துவர்களால் கூறப்பட்டது. இதனால் விக்னேஷ் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தால் மட்டுமே கொரோனா தொற்று இருந்துள்ளதா, அதனால்தான் விக்னேஷ் உயிரிழந்துள்ளாரா என யூகங்களுக்குப் பதில் கிடைக்கும். இந்த உயிரிழப்பு அந்த பகுதியில் கொரோனா பரவி விட்டதாகத் தகவல் பரபரப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு : பெண்ணுக்கு செலுத்தப்பட்ட முதல் தடுப்பு மருந்து..!!

Tue Mar 17 , 2020
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பரிசோதனை அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7000 பேர் இறந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலைத் தடுக்க இதுவரை எந்த தடுப்பு ஊசி மருந்துகளும் இல்லாமல் இருந்தது. இந்தியா, நார்வே ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா […]

You May Like

%d bloggers like this: