கொரோனா வைரஸ்: தமிழ் நாட்டின் பாதிப்பு நிலை என்ன?

கொரோனா அறிகுறிகளுடன் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 401ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக இத்தாலியில் இறப்பு விகிதம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு 627 பேர் பலியாகியுள்ளனர். சீனாவை விட இறப்பு எண்ணிக்கையில் அந்த நாடு முன்னிலையில் உள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸால் 4032 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் கொரோனா தாக்கம் பல இடங்களில் காணப்படுகிறது. மூன்று பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் பலர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று துபாயிலிருந்து மதுரை வந்த 2 குழந்தைகள் உட்பட 155 பேர் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் யாருக்கும் கொரோனா அறிகுறிகள் இல்லை. இருப்பினும் தொடர்ந்து சில நாள்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்பதற்காக கைகளில் அழியாத மை இடப்பட்டுள்ளது. அதில் எந்த தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மூன்று பேர் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களோடு தொடர்புடைய 84 பேரை கண்டறிந்து அவர்களுக்கும் சோதனை நடைபெறுகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு தினமும் 150 பேர் சோதனைக்காக வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா அறிகுறிகளுடன் உள்ளவர்களை அழைத்துவர பிரத்யேக ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்கள் மூலம் நாடு திரும்பிய சுமார் 2 லட்சம் பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2984 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை சார்பில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக வெளிநாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளும் பயணங்களைத் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் 224 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisements

Next Post

ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு!! என்ன குழந்தை தெரியுமா ?

Sat Mar 21 , 2020
சீரியல் நடிகர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. அதனால் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்திருந்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் திருமணம் ரகசியமாக நடந்தாலும் சில மாதங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆல்யா மானசா கர்ப்பமாக இருந்தார். அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிலையில் நேற்று ஆல்யா மானசாவுக்கு பெண் […]
%d bloggers like this: