பெண் கால்நடை மருத்துவர் எரித்து கொலை… ஹைதராபாத்தில் பயங்கரம்..!

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணி புரிந்து வந்த பிரியங்கா ரெட்டி(26), தனது பைக் நேற்று நள்ளிரவு பஞ்சர் ஆனதால், டோல்கேட் அருகே தனியாக நிற்பதாகவும், பயமாக இருப்பதாகவும், தனது தங்கைக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், சிறிது நேரத்திலேயே அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் ஆன நிலையில், அதிகாலையில் பாலத்துக்கு அடியில் எரிந்த சடலமாக பிரியங்கா ரெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பிரியங்கா ரெட்டியின் தங்கை மற்றும் குடும்பத்தினர் அழுது கொண்டே தெரிவிக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் இளைஞர்கள் ஷேர் செய்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இதயம் நொருங்கி விட்டது, மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மனதை உலுக்குகிறது என தனது பதிவில் கூறியுள்ளார். மேலும், ஹைதராபாத் நகரம் மிகவும் பாதுகாப்பானது என கருதி இருந்தேன். ஆனால், நேற்றைய சம்பவம் தனது நம்பிக்கையை நொறுக்கி விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பான தேசமாக நமது தேசம் எப்போது மாறும் என்றும், இந்த கொடூர செயலை செய்த கயவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், தான் கர்மாவை நம்புபவள், அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.

தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்து வரும் மெஹ்ரின் பிர்ஸ்டா, இந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ந்து போயுள்ளேன். விரைவில் அந்த கயவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்துக்கு முன் நிறுத்தப் பட வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பெண்ணுக்கு எப்படி வலித்திருக்கும் என கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. தற்போது அதே வலியை அந்த குடும்பமும் அனுபவித்து வருகிறது. குற்றவாலிகளுக்கு தண்டிக்கப் படவேண்டும் என டோலிவுட் நடிகை லாவன்யா திரிபாதி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

3வது திருமணம் செய்யபோகும் ரேஷ்மா! மாப்பிளை இவர் தானா?..வைரலாகும் புகைப்படம்..!

Sat Nov 30 , 2019
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது. இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா “புஷ்பா புருஷன்” என்ற ஒரே […]
%d bloggers like this: