திட்டமிட்டு செய்யப்பட்ட பஞ்சர்.. உதவி செய்வதாக நடித்து வன்புணர்வு.. மருத்துவர் கொலையின் ஷாக் பின்னணி..!

ஹைதராபாத்தில் 26 நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதபாரத்தில் கடந்த புதன்கிழமை நடந்த வன்புணர்வு மற்றும் கொலை சம்பவம் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுக்க இந்த வன்புணர்வு எதிராக கடுமையான குரல்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இணையத்தில் அந்த பெண் கால் நடை மருத்துவருக்கு நீதி வேண்டி பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்தவர் அந்த 26 வயது கால்நடை மருத்துவர். மருத்துவ பணி நிமித்தமாக இவர் ஹைதராபாத்தில் இருக்கும் கச்சிவ் பவுலி செல்ல வேண்டி இருந்தது. இதற்காக அவர் தனது ஸ்கூட்டியில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த லாரி ஓட்டுநர் ஒருவர் அந்த பெண்ணிடம் உங்கள் பைக் டயர் பஞ்சர் ஆகியுள்ளது. அதை கொடுங்கள் நான் மாற்றி வருகிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது விசாரணையில் அந்த பைக்கை பஞ்சர் செய்ததே அந்த லாரி டிரைவர்தான் என்பது தெரிய வந்துள்ளது.

அப்போது அங்கு வந்த லாரி ஓட்டுநர் ஒருவர் அந்த பெண்ணிடம் உங்கள் பைக் டயர் பஞ்சர் ஆகியுள்ளது. அதை கொடுங்கள் நான் மாற்றி வருகிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது விசாரணையில் அந்த பைக்கை பஞ்சர் செய்ததே அந்த லாரி டிரைவர்தான் என்பது தெரிய வந்துள்ளது. அந்த லாரி டிரைவரும் இன்னும் மூன்று பேரும் சேர்ந்துதான் இந்த கொடுரத்தை செய்துள்ளனர். அந்த லாரி டிரைவர், பெண்ணின் பைக்கை எடுத்துக் கொண்டு பஞ்சர் ஓட்ட சென்றுவிட்டார். அந்த பெண் பழைய டோல் கேட்டின் அறை ஒன்றின் வெளியே நின்று இருக்கிறார். அப்போது அங்கு வந்த லாரி டிரைவரின் நண்பர்கள் அந்த பெண்ணை பார்த்து சைகை காட்டியுள்ளனர்.

இவர்கள் மூன்று பேரும் மோசமாக குதித்துள்ளனர். 7 மணிக்கே இவர்கள் அந்த பெண்ணின் பைக்கை பஞ்சர் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் உடனே தனது சகோதரிக்கு போன் செய்து, நடந்த விஷயத்தை குறிப்பிட்டுள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது. பைக் வரும் வரை என்னிடம் பேசிக்கொண்டு இரு. எனக்கு இங்கு இருக்கும் நபர்களை பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் அதன்பின் 9.40 மணிக்கு அந்த பெண்ணின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

அந்த பெண் போனில் பேசுவதை பார்த்து உஷாரான மூன்று பேரும் அந்த பெண்ணை வாயை மூடி அருகில் இருந்த பழைய கட்டிடம் ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளனர். பின் அங்கேயே வைத்து அந்த பெண்ணை இவர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின் அங்கு வந்த லாரி டிரைவரும் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

அதன்பின் அந்த பெண்ணை மூக்கை மூடி கொலை செய்துவிட்டு, லாரி வைத்து சத்தனபள்ளியில் இருக்கும் பாலம் ஒன்றுக்கு எடுத்து சென்றுள்ளனர். அதற்குள் லாரி டிரைவரின் நண்பர்கள் வேறு வேறு பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் வாங்கி வந்துள்ளனர். பின் அங்கேயே வைத்து அந்த பெண்ணின் உடலை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

இந்த பலாத்காரம் மற்றும் கொலை நாடு முழுக்க பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடுமையை செய்த முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisements

fogpriya

Next Post

''மூக்குத்தி அம்மன்'' படத்தில் இணைந்த நயன்தாரா..!

Sat Nov 30 , 2019
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று ’மூக்குத்தி அம்மன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த வேடத்தில் நடிப்பதற்காக அவர் விரதம் இருந்து வருவதாக கூறப்பட்டு அதன் பின்னர் அந்த செய்தி நயன்தாரா தரப்பினரால் மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் […]
%d bloggers like this: