மீண்டும் இணைய இருக்கும் ‘நானும் ரெளடிதான்’ கூட்டணி..!! விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா மீண்டும் ஜோடியா?..

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ’நானும் ரவுடிதான்’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார் என்பதும், விஜய்சேதுபதி நயன்தாரா நடித்து இருந்தனர் என்பதும் இந்தப் படம் தமிழ் திரை உலகின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று என்பதும் தெரிந்தது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் சூர்யா நடிப்பில் இயக்கிய ’தானா சேர்ந்த கூட்டம்’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக விக்னேஷ் சிவன் எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். இடையில் சிவகார்த்திகேயன் படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்க முயற்சித்ததும் பின்னர் அந்தப் படம் கைவிடப்பட்டது என்பதும்தெரிந்ததே.

இந்த நிலையில் மீண்டும் ’நானும் ரவுடிதான்’ கூட்டணியை விக்னேஸ்வரன் அமைத்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா மீண்டும் ஜோடி சேர உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை தற்போது மாஸ்டர் படத்தை தயாரித்து வரும் லலித் என்பவர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என தெரிகிறது. விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி, அனிருத் என ‘நானும் ரவுடிதான்’ கூட்டணி மீண்டும் இணைய இருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் லலித் தயாரிப்பில் ஏற்கனவே விஜய் சேதுபதி ’துக்ளக் தர்பார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

Dharala Prabhu - Official Teaser | Harish Kalyan, Tanya Hope, Vivek | Krishna Marimuthu

Wed Jan 29 , 2020
Advertisements
%d bloggers like this: