பிளாஸ்டிக் பற்றி இனி கவலை வேண்டாம்… “பிளாஸ்டிக்கை மட்க செய்யும் பூச்சிகள்” ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!!

கனடா நாட்டில் உள்ள பிராண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மெழுகுப் புழுக்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தனர். இந்நிலையில் இதன் மூலம் ஒரு புதிய அற்புதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மெழுகுப் புழுக்களின் வயிற்றில் சில கிருமிகள் உள்ளது. இந்த கிருமிகள் பிளாஸ்டிக்கை எளிதில் செரிமானம் செய்து, பிறகு அது ஆல்கஹாலாக மாறுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனால் இந்த மெழுகு புழுக்களின் வயற்றில் உள்ள கிருமிகளை மட்டும் தனியாக எடுத்து ஆய்வு செய்தபோது, புழுக்களின் வயிற்றில் இருக்கும்போது தான் அந்த கிருமிகள் அதிகளவில் பிளாஸ்டிக்கை செரிமானம் செய்கின்றன என்பது தெரிய வந்தது.

இதனால் ஆராய்ச்சியாளர்கள் மெழுகு புழுக்களுக்கு பிளாஸ்டிக்கை கொடுத்து ஆய்வு செய்து பார்த்தனர். மேலும் இந்த புழுக்களை பயன்படுத்தி அதிகளவில் உள்ள பிளாஸ்டிக் குப்பையை ஆல்கஹாலாக மாற்ற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனால் தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வருங்கால தலைமுறையினருக்கு இது பெரிதளவில் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisements

Next Post

"தாராள பிரபு" சினிமா விமர்சனம்..!!

Fri Mar 13 , 2020
விந்தணு தானத்தை மையமாக வைத்து இந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்கே தாராள பிரபு. விந்தணு தானம் பற்றிய படத்தை தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் ரீமேக் செய்வது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் சிறப்பாக ரீமேக் செய்த இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்துவுக்கு பாராட்டுக்கள். பாரிஸ் கார்னரில் செயற்கை கருத்தரிப்பு மையம் நடத்தி வருகிறார் கண்ணதாசன்(விவேக்). அவர் தன்னை தேடி வரும் தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய […]
%d bloggers like this: