மேடையில் ஏறும் போது தடுக்கி விழுந்த பிரதமர் மோடி..!

இந்திய பிரதமர் மோடி உத்திரபிரதேசத்தில் நடைப்பெற்ற கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக உத்திரபிரதேசம் சென்றிருந்தார். இந்த கூட்டத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், கங்கை நதியை தூய்மைபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட நமாமி கங்கா திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின்னர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கங்கை நதியில் படகில் பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு, படகில் திரும்பிய பிரதமர் மோடி, படியில் கரையேறும் போது கால் தடுக்கி கீழே விழ முயன்றார். அவருடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக பிரதமருக்கு உதவி செய்தனர். இதனால், அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Advertisements

fogpriya

Next Post

"யுவன் சங்கர் ராஜா" அறிமுகப்படுத்தும் புதிய இசை ஆல்பம்..! "மறுபிறந்தாள்"..!

Sun Dec 15 , 2019
மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ) யுவன் சங்கர் ராஜா அறிமுகப்படுத்தும் இசை ஆல்பம் ! சர்வதேச தைய் திரைப்பட விழாவில் சிறந்த வீடியோ பாடல் என்ற விருதை இப்பாடல் பெற்றுள்ளது.யுவன் சங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்டு நிறுவனம் தொடர்ச்சியாக புதிய இசையை, புத்தம் புது திறமைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் தான் ஷஹானி ஹஃபீஸ்னின் “மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ). திருநங்கை […]
%d bloggers like this: