தங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா? தங்கத்தை பற்றி நீங்கள் தெரிந்திராத ரகசியம்..!!

தங்கம் வாங்குவது என்பது இன்று ஒவ்வொருவரின் கனவும் கூட! இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் விற்ற விலையை இன்று ஒரு கிராம் தங்கமே ஓவர்டேக் செய்து விட்டது. எதிர்காலத்தைக் கணக்கிட்டு முதலீடு செய்வதில் தங்கம், நிலம் இவை இரண்டும் தான் நிரந்தரமாக மார்க்கெட் வேல்யூ உள்ளதாக இருக்கிறது. இந்த தங்கத்தை வாங்குவதில் நீங்கள் ஏன் என்றே அறியாத சில சுவாரஸ்ய விசயங்களின் தொகுப்பு தான் இது.

22 கேரட், 24 கேரட் என்றெல்லாம் கடைகளில் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதில் 24 கேரட் என்பது மிகவும் சுத்தமான தங்கம். இதற்கு வளைந்துகொடுக்கும் ஹன்மை இருக்காது. இதனால் இதை பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் தான் வைத்திருப்பார்கள். மற்றபடி ஆபகரணம் செய்ய 22 கேரட்டைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை வரும் அட்சயதிருதியை தங்கம் வாங்க ஏற்ற நாள் என சொல்லப்படுகிறது. அன்று அரிசி, அன்னதானம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும் ஆண்டுக்கு, ஆண்டு தங்கம் விலை ஏறுமுகத்தில் சென்று கொண்டிருப்பதால் தங்கத்தில் செய்யும் முதலீடு சேபாக இருக்கும் என்பதால் அட்சயதிருதியை அன்று தாராளமாக நகை வாங்கலாம்.

நாம் தங்கநகை வாங்கும்போது, அதில் சேதாரம் என்றும் ஒரு தொகையைப் பிடித்தம் செய்வார்கள். அது குறித்து சொல்ல வேண்டுமென்றால், ‘’இரண்டு பவுனில் ஒரு நகை செய்ய வேண்டுமானால் அதற்கு சிறிது கூடுதலான அளவு தங்கத்தை எடுத்துக்கொண்டால் மட்டுமே இரண்டு பவுனில் ஆபகரணத்தை உருவாக்க முடியும். வாடிக்கையாளர் குறிப்பிட்ட வடிவத்தில் நகை செய்யும்போது சிறிது நகை இழப்பு ஏற்படும். இந்த இழப்புக்காக நம்மிடம் வசூலிக்கப்படும் தொகையே சேதாரம். சேதாரமான தங்கம் நகை வேலை செய்த தொழிலாளர்களுக்கே வழங்கப்படுகிறது.

இதேபோல் தங்கநகை வேலை செய்தவர்களுக்கு போக்குவரத்து செல்வாக அன்றைய காலத்தில் வழங்கப்பட்ட தொகை தான் செய்கூலி. ஒரு பவுனுக்கு ஒரு கிராம் என்பதே நியாயமான சேதாரம். அதற்கும் குறைவாக சேதாரம் வசூலித்தால் நம் தங்கத்தின் தரமும் குறையும் அபாயம் இருக்கிறது.

இதேபோல் நம் கழுத்து, கைகளில் அணியும் தங்கநகைகளோடு வெள்ளி, கவரிங்கை சேர்த்து அணிவதை தவிர்ப்பதன் மூலம் தங்கத்தின் தரத்தைப் பாதுகாக்கலாம். இதேபோல் செண்ட் உள்ளிட்ட நறுமணப்பொருள்கள் தங்கத்தின் மீது படவே கூடாது. தங்கத்தை விற்றால் வாங்கிய கடையிலேயே விற்பது தான் லாபம். அது சரி? ஏன் தங்கம், வெள்ளி, கவரிங்கோடு உரசக் கூடாது? பொதுவாகவே ஆபகரணம் அதிகமாக ஏதேனும் ஒரு பொருளுடன் உராயும்போது ஏற்படும் இழப்பே தேய்மானம் எனப்படுகிறது. இதனால் ஆபகரணம் உராய்வதைத் தவிர்ப்பதும் அவசியம்.

பிங்க் தாள் எனப்படும் இளஞ்சிவப்பு நிற தாளில் தான் தங்கத்தை நகைக்கடையில் கொடுக்கிறார்கள். அது ஏன் தெரியுமா? புதிதாக செய்த தங்கம் மஞ்சள் நிற பொலிவுடன் இருக்கும். அதை இளஞ்சிவப்பு நிறத்தாளில் வைக்கும்போது, அடர்மஞ்சள், அடர் இளஞ்சிவப்பு நிறங்களின் பிரதிபலிப்பு, இணைப்பு கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கவரும். அதற்காகத்தான் இந்த பிங்க் தாள்!

சிலநேரம் தங்கம் கருத்துப் போவதைப் பார்த்திருப்போம். அதற்கு காரணம் அளவுக்கு அதிகமாக பொடி சேர்ப்பது தான். அது என்ன பொடி என்கிறீர்களா? தங்கத்தை ஒட்டப் பயன்படுத்துவதே பொடி. இது வெள்ளி, மற்றும் செம்பை சேர்த்து தங்கத்தின் சதவிகிதத்தை குறைப்பது. இது அதிகமாகும் போது நாம் ஏமாற்றப்படுகிறோம். இதற்கு மாற்றாக காட்மியம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இது தங்கம் செய்பவரின் நுரையீரலை பாதிக்கிறது. இதற்கு மாற்றாக துத்தநாகம், மற்றும் இண்டியம் பயன்படுத்தப்பட்டது. இதனை சொக்கத்தங்கத்தில் ஒட்டுதல் செய்தால் மட்டுமே bis ஹால்மார்க் கிடைக்கும்.

Advertisements

Next Post

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிறகு.. செம ஹாட்டான உடையில் "ஸ்ருதிஹாசன்" வெளியிட்ட வீடியோ...

Sat Mar 7 , 2020
உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் கமல்ஹாசனுக்கு முதல் மனைவியின் மகள் ஆவார். சுருதி தன் அப்பா உலக புகழ் நடிகராக இருந்தாலும் அந்த பின்புலத்தை வைத்துக்கொண்டு முன்னேற விரும்பாதவர். தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று எப்பவும் ஆசை படுபவர். முதலில் இவருக்கு பெரிய பாப் பாடகி ஆகவேண்டும் என்ற ஆசை தான் இருந்தது. அதன் பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் […]
%d bloggers like this: