Advertisements

Advertisements

அடுத்த காலாண்டில், இந்தியாவில் வெறும் 19 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே வேலைக்கு ஆள் எடுக்க உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மேன்பவர் குரூப் என்ற நிறுவனமானது, இந்தியாவில் 5,131 நிறுவனங்களிடமும், உலகம் முழுவதும் 44 நாடுகளில் உள்ள 59,000 நிறுவனங்களிடமும் ஆய்வு மேற்கொண்டது. தற்போது வெளியாகி உள்ள அந்த ஆய்வறிக்கையில்,  வரும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் 19 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே வேலைக்கு புதிதாக ஆட்களை நியமிக்க […]

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை சென்னை வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைகுறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் உற்சவ மூர்த்தியாக விளங்கிவந்த நடராஜர் சிலையை சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையர்கள் திருடிச்சென்றனர். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரி […]

சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம் ஒரு உயிரின் மதிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா? உயர்நீதிமன்றம் கேள்வி பேனர் விவகாரத்தில் இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை பலி வாங்க துடிக்கிறீர்கள்? – உயர்நீதிமன்றம் சட்டவிரோத பேனர்களை ஒழிக்கும் விவகாரத்தில் இன்னும் எவ்வளவு ரத்தம் தேவைப்படுகிறது – உயர்நீதிமன்றம் கேள்வி சட்டவிரோத பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் ரத்தம் குடிக்க துடிக்கிறீர்களா எனவும் […]

சமூகவலைதளங்களோடு ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி பேஸ்புக் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதனை நிராகரிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை, மும்பை உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் மட்டுமே விசாரிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. […]

உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், ஐபோன்-11 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில் வருகிற 27ந் தேதி முதல் இவை விற்பனைக்கு வருகின்றன. ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் புதிய போன்களை வெளியிட்டு வருகிறது. இதையொட்டி, அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐபோன் 11, ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன்11 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை ஆப்பிள் நிறுவனத் […]

பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசு விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இத்திரைப்படம் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு தேர்வாகியுள்ளது. புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை, நவதர்சன் திரைப்படக்கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில் இந்திய திரைப்பட விழா-2019- ஐந்து  நாட்களுக்கு புதுச்சேரி முருகா திரையரங்கில் நடைபெறுகிறது.வரும் 13ம் தேதி மாலை முருகா திரையரங்கில் நடைபெறும் விழாவில் சங்கரதாஸ்சுவாமிகள் விருதை முதல்வர் நாராயணசாமி வழங்குகிறார்.  2018ம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் […]

மீடியாக்கள் தன்னை வைகை புயலாக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ள நித்தியானந்தா, வின்னர் படத்தில் வரும் வடிவேலுவின் வசனத்தை பேசி தனது சிஷ்ய கோடிகளுக்கு அருளாசி வழங்கி வருகிறார் பாஸ்போர்ட் முடக்கத்தால் வெளி நாடு செல்ல முடியாமல் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திலேயே முடங்கி கிடக்கும் நித்தியானந்தா தினமும் யூடியூப் வீடியோவில் தோன்றி தனது சிஷ்ய கோடிகளுக்கு விஞ்ஞான ரீதியாக அருளாசி வழங்கி வருகின்றார். அந்தவகையில் அண்மையில் அருளாசி வழங்கிய நித்தி […]

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் சேலையில் இன்றும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். ஜோக்கர் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை ரம்யா பாண்டியன், கடந்த சில நாட்களாக தனது டிவிட்டர் பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் தொடர்ந்து லைம் லைட்டில் இருக்கிறார் ரம்யா பாண்டியன். சேலை மீது தீராத காதல் கொண்டுள்ள ரம்யா பாண்டியன் விதவிதமான போட்டோக்களை எடுத்து வலையவிட்டு வருகிறார்.

Advertisements