திரைத்துறையில் பாரதிராஜாவின் சாதனையை முறியடிப்பதே முழுமையான சாதனை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து, இயக்கிய ஒத்த செருப்பு சைஸ்7′ என்ற படம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஃபாப்டா அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் […]

Advertisements

ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கைதாகியுள்ள, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், தமது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளார். ஹாவர்ட் பிசினஸ் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற ப.சிதம்பரம், 1984ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சிவகங்கை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுகளில் வர்த்தக அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் பல்வேறு பொறுப்புகளை […]

உலகப் புகழ் பெற்ற காமிக்ஸ் ஹீரோ ஸ்பைடர்மேன் இல்லாமல் அடுத்த படத்தை தயாரிக்க மார்வெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஸ்பைடர் மேன் படங்களை 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் மார்வெல்நிறுவனம் தயாரித்துள்ளது. இவ்விரு படங்களும் வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளன. இதில் டாம் ஹாலண்ட் ஸ்பைடர் மேனாக நடித்திருந்தார். இனிமேல் ஸ்பைடர் மேன் படங்களைத் தயாரிப்பதில்லை என்று மார்வெல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஸ்பைடர் மேன் படங்களின் தயாரிப்பு நிறுவனங்களான டிஸ்னி நிறுவனத்திற்கும் […]

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், அதிலும் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேரில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணியாற்ற,  ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை, தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு […]

நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறி 47 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டு புகாரை, இயக்குநர் வடிவுடையான் மறுத்திருக்கிறார். சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் நரேஷ் கோத்தாரி, பொட்டு, செளகார்பேட்டை, தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட படங்களை இயக்கியவரான இயக்குனர் வடிவுடையான் மீது புகார் அளித்தார். கடந்த 2016ல் தன்னை அணுகிய இயக்குநர் வடிவுடையான் 7 கோடி ரூபாய் செலவில், நடிகர் விஷாலை வைத்து […]

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன் ஜாமின் மறுக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.  ஐ.என்.எக்ஸ். மீடியா தொலைக்காட்சி நிறுவனமானது 2007ஆம் ஆண்டில் மொரிசியஸ் நாட்டின் மூன்று நிறுவனங்களிடம் இருந்து அந்நிய நேரடி முதலீடாக 305 கோடி ரூபாய் பெற்றதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்நிய முதலீட்டைப் பெற்றுக் கொடுக்க அப்போது நிதி […]

தன் மீது தனியார் தொலைக்காட்சி அளித்த புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக நடிகை மதுமிதா கூறியுள்ளார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, காவிரி பிரச்சனை தொடர்பான வாக்குவாதத்தில் தன்னை காயப்படுத்திக் கொண்டதாகக் கூறி 50 நாட்களிலேயே வெளியேற்றப்பட்டார். ஒப்பந்தப்படி மதுமிதாவுக்கு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், மீத பணத்தை சில நாட்களில் கொடுப்பதென பேசி முடிவெடுத்து இருந்ததாகவும் தொலைக்காட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த […]

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ள நிலையில், சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 2ஆம் தேதி அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது இந்து அமைப்புகளும், கோயில் நிர்வாகிகளும் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவது வழக்கம். குறிப்பாக சென்னையில் நிறுவப்படும் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த […]

Advertisements