கோவையில் சிறுவன், சிறுமி கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.  கோவையை சேர்ந்த துணி வியாபாரி ஒருவரின் 11 வயது மகள் மற்றும் 8 வயது மகன் ஆகியோர் கடந்த 2010 ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி கடத்தப்பட்டனர். கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவர் அந்தக் குழந்தைகளைக் கடத்திச் சென்று தனது நண்பர் மனோகரன் உதவியுடன் கழுத்தை நெரித்தும், […]

Advertisements

சமூகவலைதளங்களோடு ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி பேஸ்புக் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதனை நிராகரிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை, மும்பை உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் மட்டுமே விசாரிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. […]

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து சவரன் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பல புதிய உச்சங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 304 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டி விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு […]

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற அக்கா, தம்பி கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு அடுத்த ஏரிமேடு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வீரன் என்பவரின் மகள் தனுஸ்ரீ, மகன் அருண் ஆகிய இருவரும் அனுப்பம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று காலை குழந்தைகள் இருவரும் வழக்கம் போல பள்ளிக்கு செல்லும் போது அவ்வழியே வந்த இளைஞன் […]

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, வெள்ளைகேட், பொன்னேரிகரை, வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திக்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாரல் […]

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன் ஜாமின் மறுக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.  ஐ.என்.எக்ஸ். மீடியா தொலைக்காட்சி நிறுவனமானது 2007ஆம் ஆண்டில் மொரிசியஸ் நாட்டின் மூன்று நிறுவனங்களிடம் இருந்து அந்நிய நேரடி முதலீடாக 305 கோடி ரூபாய் பெற்றதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்நிய முதலீட்டைப் பெற்றுக் கொடுக்க அப்போது நிதி […]

உக்ரைனில் இளைஞர் ஒருவன் உயரிய கட்டிடத்தின் மீதிருந்து தலைகீழாகத் தொங்கியபடி படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளான். சைய் (Shiey) என அழைக்கப்படும் நபர் ஒருவர் உலகின் பல உயரிய கட்டிடங்கள், கைவிடப்பட்ட கட்டிடங்களின் உச்சங்களுக்கு சென்று மிகக் குறுகிய சுவரில் பிடிமானமின்றி அனாயசமாக நடத்தல் போன்ற காரியங்களைப் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறான். தனது நண்பனின் உதவியோடு முகத்தை அடையாளம் காட்டிக் கொள்ளாது ஐரோப்பாவின் உயரிய கட்டிடங்களில் சாதனை […]

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல நடிகை மஞ்சுவாரியர் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் இமாச்சலில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  நடிகை மஞ்சுவாரியரையும்,அவருடன் தவிக்கும் 200 பேரையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்டவர் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர்..! 90 களின் இறுதியில் மலையாள திரை உலகின் கனவு கன்னியாக வலம் வந்த மஞ்சுவாரியர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு […]

பால் விலை உயர்வை பலரும் அரசியலாக்கி வருவதாக குற்றம்சாட்டி உள்ள தமிழிசை சௌந்தரராஜன், பால் விலை உயர்வால் பொதுமக்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், படிப்படியாக விலை உயர்த்தப்பட்டிருந்தால் பாதிப்பு இருந்திருக்காது என்றும் கூறினார். ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்ததை பாராட்டி பாஜக பிரமுகர் ராஜலட்சுமி மண்டா கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை வந்த அவரை […]

உலகப்புகழ் பெற்ற நடிகர் ‘தி ராக்’ டுவைன் ஜான்சன் நேற்று ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் 11 வருடங்களாக காதலித்து வந்த Lauren Hashian என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார். நேற்று அவர்கள் திருமணம் ஹவாய்யில் குடும்ப நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதை இன்று புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார் ராக். ராக்-Lauren Hashian ஜோடிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements