நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 65-வது பிறந்தநாள்… குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி நிற்கும் சாதனை நாயகனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு இதோ… 5 வயது சிறுவன் தனது தீர்க்கமான கண்களால் சோகத்தை வெளிப்படுத்தி அனைவரையும் நெகிழ வைத்த காட்சி இது…. இப்படி அறிமுகமாகிய கமல்ஹாசனுக்கு, சிறுவயதிலேயே எம்ஜிஆருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரும்பு மீசையுடன், பாலசந்தர் இயக்கத்தில் வெளியான படங்களில் நடிகராக உருவெடுத்தார் கமல்ஹாசன்… […]

Advertisements

பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசு விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இத்திரைப்படம் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு தேர்வாகியுள்ளது. புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை, நவதர்சன் திரைப்படக்கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில் இந்திய திரைப்பட விழா-2019- ஐந்து  நாட்களுக்கு புதுச்சேரி முருகா திரையரங்கில் நடைபெறுகிறது.வரும் 13ம் தேதி மாலை முருகா திரையரங்கில் நடைபெறும் விழாவில் சங்கரதாஸ்சுவாமிகள் விருதை முதல்வர் நாராயணசாமி வழங்குகிறார்.  2018ம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் […]

மெர்சல் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மேஜிக் சொல்லிக் கொடுத்த மேஜிக் நிபுணருக்கு 4 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 4 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி: அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்டோர் நடித்து வெளியான மெர்சல் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்திற்காக விஜய்க்கு மேஜிக் சொல்லி தந்ததற்காக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் 4 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி வைத்துள்ளதாக, கனடாவை […]

நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறி 47 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டு புகாரை, இயக்குநர் வடிவுடையான் மறுத்திருக்கிறார். சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் நரேஷ் கோத்தாரி, பொட்டு, செளகார்பேட்டை, தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட படங்களை இயக்கியவரான இயக்குனர் வடிவுடையான் மீது புகார் அளித்தார். கடந்த 2016ல் தன்னை அணுகிய இயக்குநர் வடிவுடையான் 7 கோடி ரூபாய் செலவில், நடிகர் விஷாலை வைத்து […]

வருமான வரிச் சட்டத்தில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் புதிய நேரடி வரி விதிகள் வரைவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.  கடந்த ஜூலை 31ஆம் தேதியே புதிய நேரடி வரி விதிகளை நிதி அமைச்சகம் வெளியிட இருந்தது. ஆனால், அன்று வெளியாகவில்லை. சில நாட்கள் தாமத்துக்குப் பின், ஆகஸ்ட் 19ஆம் தேதி புதிய நேரடி வரி விதிகள் வரைவு நிதி நிதி அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நித அமைச்சர் நிர்மலா சீதாராமன் […]

பள்ளிகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமானதால் தான் தமிழ் மொழியை கற்பது குறைந்துள்ளதாக நடிகை சுஹாசினி பேசியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ண சாரதா வித்யாலயா பெண்கள் பள்ளியில் மன அழுத்தம் குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த பள்ளியின் முன்னாள் மாணவியான நடிகை சுஹாசினி பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் எந்த மொழியின் மீதும் வெறுப்பு இருக்க கூடாது என்றும் இந்தியையும் […]

Advertisements